jump to navigation

Happy Birthday My dear Naseera நவம்பர் 22, 2007

Posted by Mubaarak in Personal.
Tags: ,
trackback

என் மேலான அன்பிற்குரிய மகளுக்கு,

அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள்

(23-November-2007)

Happy Birthday My Dear

காலங்காலமாய் தொழுதிருந்தும்
கண்கலங்கி கரைந்திருந்தும்
நெஞ்சமெனும் நிலத்தினிலே
நெற்றிதேய வீழ்ந்திருந்தும்
கடவுளவன்
கண்முன்னே வந்ததில்லை
கருணைகொண்டு தொட்டதில்லை
என் குரலும் கேட்டதில்லை
வாரித்தழுவி அணைத்ததில்லை
நீ எங்கள் மகளாய்
பிறந்திட்ட பொழுதினில்
கடவுளவன் கருணையினை
கண்டதாய் எண்ணிட்டேன்
களிப்புமிக கொண்டிட்டேன்
உள்ளத்தில் ஊறவைத்த
ஓராயிரம் கோடி வார்த்தைகளில்
உனக்கெனவே தான்அவனை
அனுதினமும் பிரார்த்தித்தேன்
திருமகளே உனைப்பிரிந்து
கணந்தோறும் அழுகின்றேன்
கண்ணீராய் வழிகின்றேன்
உன் உயர்வான
நல் வாழ்வுக்கெனவேதான்
உனைவிட்டு வாழ்கின்றேன்
உயிர் கரைந்து நிற்கின்றேன்
பிரியங்களுடன்….முபாரக்
*************************

மறுமொழிகள்»

1. ARZ - நவம்பர் 29, 2007

Wow!!!!!!!!! thatz a wonderful b’day gift.. DADDY!!!!!!!!!

~ Zareena


மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.